இணையம் மூலம் அரசு பணிகள் விரைவாக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி

A-Raja

A-Raja

இணையதளம் வாயிலாக அரசு பணிகளை விரைவு படுத்த மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்க உள்ளது என்று மத்திய அமைச்சர் ராசா கூறினார்.
மின்னணு முறையில் கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் கலையரங்கில் நேற்று நடந்தது. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா துவக்கி வைத்து பேசியதாவது:
இணையதளம் வாயிலாக அரசு பணிகளை விரைவு படுத்த மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்க உள்ளது. காவல் நிலையங்கள், வருவாய் துறை அலுவலகங்கள், அரசு பள்ளிகள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தற்போது காகிதத்தால் ஆன பணியை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதை முழுமையாக நீக்கி இணைய தளம் வாயிலாக அரசு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகளை 2011க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கல்வி கற்கும் போது நிறைய புத்தகங்கள் கற்க, ஆராய வேண்டியிருந்தது. ஆனால் தற்போது இ&மெயில் வாயிலாக எளிதாக நாம் கற்க வேண்டியவற்றை விரைவாக கற்று கொள் ளலாம். தற்கால மாணவர்களுக்கு இ&லேன் (மின்னணு முறை கற்றல்) முறை பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார்.
Source : Dinakaran

Leave a comment